அ - வரிசை 38 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அர்ப்பணம்

ஈகை,தற்கொடை

அர்ப்பணிப்பு

உயர்ந்த நோக்கங்களில் ஒருவர் முழுமையாகக் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு

அரக்கப் பரக்க

அவசரம் அவசரமாக
அவசரமும் பதற்றமும்

அரக்கன்

(அன்பு,இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவன்

அரக்கி

(அன்பு,இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவள்

அரக்கு

முத்திரையிடப் பயன்படும் கருஞ்சிவப்பு மெழுகு

அரக்கு

நகர்தல், தரையோடு சேர்த்து நகர்தல்

அரக்குழா

வஞ்சிரம்

அரங்கம்

மேடை

அரங்கேற்றம்

ஒரு புதிய கலைப் படைப்பைப் பார்வையாளர்களின் முன் முதல் முறையாக அளிக்கும் நிகழ்ச்சி

அரங்கேற்று

அரங்கேற்றம் செய்தல்

அரங்கேறு

அரங்கேற்றம் நிகழ்தல்
அரங்கேற்றப்படுதல்

அரசகரும மொழி

ஆட்சிமொழி

அரச துறை

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை

அரச படை

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவம் ,காவல்துறை போன்ற படை பிரிவு

அரசமரம்

(ஆலமரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு வகை மரம்

அரசல் புரசலாக

அரைகுறை நிலையில்,முழு விவரத்துடன் இல்லாமல்

அரசவர்த்தகமானி

அரசிதழ்

அரசவைக் கவிஞர்

அரசால் நியமிக்கப்பட்டு அரசுக்கும்,அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கவிதைகலை எழுதித் தரும் கவிஞர்

அரசன்

மன்னன்
வேந்தன்