அ - வரிசை 37 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அயல் | 1. உறவுக்குள் அமையாதது,அந்நியம் 2.(ஒருவர் வசிக்கும் பகுதியை) ஒட்டியிருக்கும் பகுதி 3.தன் நாட்டைச் சேராதது |
அயல்நாடு | வெளிநாடு |
அயல்பணி | ஓர் அரசு அதிகாரி தான் சார்ந்த துரையில் அல்லாது வேறொரு(அரசுத் துறையில் அல்லது அரசு நிறுவனத்தில்) தற்காலிகமாக ஆற்றும் பணி |
அயல் மகரந்தச் சேர்க்கை | ஒரு ம்லரிலுள்ள அதே தாவரத்திலுள்ள வேறு ஒரு மலருக்கோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின் மலருக்கோ காற்று,வண்ணத்துப்பூச்சி போன்றவற்றால் கொண்டுசேர்ப்பதன் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை |
அயலட்டை | அக்கம்பக்கம் |
அயலவர் | அருகில் வாழ்பவர்,பக்கத்து வீட்டார் |
அயலான் | உறவினன் அல்லாதவன்,அந்நியன் |
அயலுறவு | வெளியுறவு |
அயலூர் | வெளியூர் |
அயலை | சுமார் 60 செ.மீ நீளத்தில் செதிள்களோடு சதைப்பற்றாக இருக்கும்(உணவாகும்) பழுப்பு நிறக் கடல் மீன் |
அயன் | (பிறவற்றோடு ஒப்பிடும்போது) மேம்பட்டது |
அயனி | ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்பதால் அல்லது இழப்பதால் மின்னூட்டம் பெற்றிடும் அணு அல்லது அணுக்கள் |
அயிரை | ஆறு,குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன் |
அயோக்கியத்தனம் | கயமை |
அயோக்கியன் | கயவன் |
அர்ச்சகர் | கோயிலில் தினப்படி பூசை,அர்ச்சனை போன்றவை செய்து வழிபாடு நடத்துபவர் |
அர்ச்சனை | போற்றி |
அர்த்தம் | பொருள் |
அர்த்தமாகு | பொருள்படுதல் |
அர்த்தராத்திரி | நள்ளிரவு |