அ - வரிசை 36 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமைச்சர் | 1.முதலமைச்சர் அல்லது பிரதமரால் அரசின் குறிப்பிட்ட துறையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர் 2.(முற்காலத்தில்)நாட்டை நிவகிக்கும் பொறுப்பில் ஆலோசனை கூற அரசனால் நியமிக்கப்பட்டவர்,மந்திரி |
அமைச்சரவை | அரசுத் துறைகலை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு |
அமைச்சன் | அமைச்சர் |
அமைதி | சத்தம் இல்லாத நிலை |
அமைதி காத்தல் | ஒலியெழுப்பாமல் இருத்தல்,பொறுமையைக் கடைப்பிடித்தல் |
அமைதிப் பகுதி | வாகனங்கள் ஒலி எழுப்பவோ ஒலிபெருக்கி வைக்கவோ தடை செய்யப்பட்ட பகுதி |
அமைதிப்படுத்து | சத்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல் |
அமைப்பாக | வசதியாகவும்,எடுப்பாகவும்,கச்சிதமாக |
அமைப்பாளர் | (ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது குழுவின் செயல்பாட்டுக்கு) பொறுப்பை ஏற்பவர் |
அமைப்பியல் | மொழி,சமூகம்,போன்றவற்றில் ஒன்றைப் புரிந்து கொள்வதில் குறிப்பிட்ட அமைப்பின் பகுதிகளுக்கும் அவற்றின் உளமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் காணப்படும் வேறுபாடுகளை முதன்மைப்படுத்தும் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு கோட்பாடு |
அமைப்பு | (ஒன்றின்)பல்வேறு கூறுகள் இணைந்து நிற்பது |
அமோகம் | மிகுதி |
அய்யா | 1.ஆண்களில் வயதில் மூத்தவரை அல்லது உயர்ந்த நிலையில் இருப்பவரைக் குறிக்கப் பயன்படுத்தும் மரியாதையான சொல் 2.தந்தை அல்லது தந்தையின் தந்தை |
அய்யா | தந்தையை அலைக்கும் முறை, வயது மூத்தவர்களை மரியாதையாக அழைக்கும் முறை |
அயச்சத்து | இரும்புச்சத்து |
அயர் | ஆச்சரியம் அடைதல்,சோர்வடைதல் |
அயர் | மூக்கில் ஒட்டியிருக்கும் காய்ந்த மூக்குச்சளி, ஆறிக்கொண்டு புண்ணின்மேல் படர்ந்திருக்கும் படை |
அயர்ச்சி | அசதி,தளர்ச்சி |
அயர்ந்து | தன்னை மறந்த நிலையில் ,ஆழ்ந்து, |
அயர்வு | அயர்ச்சி |