அ - வரிசை 35 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அமரிக்கை

ஆர்ப்பாட்டம் இல்லாத தன்மை
அடக்கம், ஆறுதல்
அமைதியாக இருத்தல்

அமல்

(இYஅர்ரப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த சட்டத்தை)நடைமுறைப்படுத்து,செயல்

அமலாக்கம்

வரி ஏய்ப்பு போன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வருவாய்த் துறையின் செயல்பாடு

அமளி

குழப்பம்

அமளி

தொகையாயிருத்தல்

அமளிதுமளி

இரைச்சலோடு கூடிய பரபரப்பு

அமாவாசை

தேய்பிறையின் கடைசி நாள்

அமிர்தம்

அமிழ்தம்.அமுதம்,(புராணத்தில்) இறவாமையைத் தரக்கூடிய தேவர்களின் உணவு

அமிலம்

அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம்

அமில மழை

தொழிற்சாலைகள்,வாகனங்கள் போன்றவை வெளியேற்றும் புகையிலிருக்கும் நச்சுவாயுக்கள் காற்றுமண்டலத்தில் நீர்த்துளிகளுடன் கலந்து அமிலமாகிப் பெய்யும் மழை

அமிழ்

(நீர்,சேறு போன்றவற்றில்) மேற்பரப்பிலிருந்து கீழ் நோக்கிச் செல்லுதல்,மூழ்குதல்

அமிழ்த்து

மூழ்கச் செய்தல்

அமினா

கட்டளைப் பணியாளர்

அமுக்கு

கீழ்நோக்கி,உழ்நோக்கி அழுத்துதல்
பலமாக நெருக்குதல்

அமுங்கு

அமிழ்தல்/சமமான பரப்பு குழிதல்

அமுத்தல்

எண்ணத்தை அல்லது கருத்தை எளிதில் வெளிக்காட்டாத தன்மை

அமுதசுரபி

(புராணத்தில்)அள்ள அள்ள வற்றாமல் உணவு தரக்கூடிய கலம்

அமுது

1.அமிர்தம் 2.இனிமை 3.சோறு,சாதம் 4.சர்க்கரைப் பொங்கல்

அமை

நிறுவப்படுதல்,உருவாக்கப்படுதல்

அமைச்சகம்

ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை