அ - வரிசை 34 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்மைப்பால் | பெரியம்மை நோய் வராமல் இருக்க போடப்படும் தடுப்பூஉசிக்கான மருந்து |
அம்மைபோடு | அம்மைவார்,அம்மை நோய் உண்டாதல் |
அம்மையார் | பொது வாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஓர் மரியாதைச் சொல் |
அம்மை வடு | அம்மைத் தழும்பு |
அமங்கலம் | மங்கலம் அல்லாதது |
அமங்கலி | கணவனை இழந்த பெண்,விதவை |
அமசடக்கு | வெளியில் எதையும் சொல்லாமல் மௌனமாக இருக்கும் தன்மை |
அமர் | உட்கார்தல் |
அமர் | தீவிரப் பாலியல் வேட்கை |
அமர்க்களப்படு | வ்ழா போன்ற நிகழ்ச்சிகளில் காணப்படும் இரைச்சலுடன் கூடிய உற்சாகமோ அல்லது வ்ரும்பத்தகாத ஒன்ரு நடந்த இடத்தில் கானப்படும் இரைச்சலுடன் கூடிய குழப்பமோ |
அமர்க்களப்படுத்து | (ஒரு விழா நிகழ்ச்சி போன்றவற்றை) கோலகலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடுதல் |
அமர்க்களம் | கோலாகலம்,விமரிசை,சிறப்பு/கூச்சலும் குழப்பமும் நிறைந்த சண்டை,கலாட்டா |
அமர்த்தல் | கர்வமும் அலட்சியமும் உள்ளடங்கித் தெரியும் தன்மை |
அமர்த்து | ஏற்பாடு செய்தல் |
அமர்வு | (கூட்டம் மாநாடு போன்றவற்றில்)குறிப்பிட்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் |
அமர்வு நீதிமன்றம் | மாவட்ட அளவிலான நீதிபதியின் கீழ் செயல்படும் நீதுமன்றம் |
அமர | என்றும் புகழுடன் நிலைத்து நிற்கக் கூடிய |
அமரத்துவம் | என்றும் புகழுடன் நிலைத்து நிற்கும் தன்மை |
அமரர் | 1.அழிவு அற்றவர் 2.காலம் சென்றவரை மரியாதையாகக் குறிப்பிடுவதற்கு அவரின் பெயருக்கு முன் சேர்க்கும் சொல் |
அமரர் ஊர்தி | இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனம் |