அ - வரிசை 33 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்புலி | நிலா |
அம்பேல் | இருந்த இடம் தெரியாமல் போதல்,காணாமல் போதல் |
அம்மட்டில் | அந்த அளவில் |
அம்மட்டுக்கு | அந்த அளவிற்கு |
அம்மணம் | நிர்வாணம் |
அம்மணம் பேசு | அசிங்கமாகவும்,ஆபாசமாகவும் பேசுதல் |
அம்மணி | பெண்களை மரியாதையாக விளிக்கப் பயன்படும் சொல் |
அம்மப்பா | அம்மாவின் அப்பா |
அம்மம்மா | அம்மாவின் அம்மா |
அம்மாஞ்சி | 1.தாய் மாமன் 2. தாய் மாமனின் மகன் |
அம்மா பிள்ளை | அம்மாவின் செல்லத்துக்குரிய பிள்ளை |
அம்மாள் | வயதான பெண்ணை மரியாதையாகக் குறிப்பிடும் சொல் |
அம்மான் | மாமா (அம்மாவின் தம்பி, அல்லது அண்ணன்) |
அம்மான் | தாயின் சகோதரர் |
அம்மி | குழவி கொண்டு மிளகாய்,தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக்கல் |
அம்முதலாக | (மேக)மூட்டமாக/மயக்கமாக,தலைச்சுற்றலோடு |
அம்மை | சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களைக் குறிக்கும் பொதுப்பெயர் |
அம்மைக்கட்டு | தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய்,பொன்னுக்கு வீங்கி |
அம்மை குத்து | அம்மை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடுதல் |
அம்மைத்தழும்பு | 1.அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச் செல்லும் குழிவான தடம் 2.அம்மை நோய்க்கான தடுப்பூசி குத்திய இடத்தில் கொப்புளம் உண்டாகி ஆறிய பிறகு காணப்படும் வடு |