அ - வரிசை 32 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபிநயம் | நாட்டியத்தில் களம்,கருத்து,காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல் |
அபிநயி | ஆடல் கலையில் உடல் உறுப்புகளை உணர்ச்சியோடு அசைத்தல் |
அபிப்பிராய பேதம் | கருத்து வேற்றுமை |
அபிப்பிராயம் | கருத்து(ஒருவருடைய சொந்தக் கருத்து) |
அபிமானம் | நன்மதிப்பு,உயர்வான எண்ணம் |
அபிமானி | (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுள்ளவர் |
அபிவிருத்தி | வளர்ச்சி |
அபின் | ஒரு வகை போதைப் பொருள் |
அபூர்வம் | அருமை |
அபூரிதக் கரைசல் | கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரையவிடும் திரவம் |
அபேட்சகர் | வேட்பாளர் |
அம்சம் | 1.பல பகுதிகளாக அல்லது பன் முகமாக உள்ளவற்றில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி 2.எடுத்துக் கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை 3.லட்சணம்,கச்சிதம் |
அம்பலம் | (ரகசியமாக இருக்க வேண்டியது) வெளியாகிவிட்ட நிலை |
அம்பலம் ஏறு | (இதுவரை வெளிப்படாமல் இருந்த ஒன்று)பலரும் அறியும்படி வெளிப்படுதல் |
அம்பலவி | மஞ்சள் நிறத் தோலுடன் நுனி வளைந்து நீளமாகவும் சதைப்பற்றோடும் இருக்கும் ஒரு வகை மாம்பழம் |
அம்பறாத்தூணி | (முதுகில் தொங்கவிட்டு)அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு |
அம்பாரம் | (பொருள்களின் )பெரும் குவியல் |
அம்பாரி | யானை மேல் அமர்ந்து செல்வதற்கான,பெட்டி போன்ற அமைப்புடைய இருக்கை |
அம்பாள் | அம்மன்,அம்பிகை,கோவிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர் |
அம்பு | வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம் |