அ - வரிசை 31 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அப்போதைய

குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் அல்லது காலகட்டத்தினுடைய

அபகரி

கைப்பற்று
கவர்ந்துகொள்

அபகாரம்

தீங்கு, கெடுதல்

அபசகுனம்

தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாகஒருவர் நம்பும்(அமங்கலமான) நிகழ்வு,பேச்சு போன்றவை

அபசாரம்

தவறு அல்லது அவமரியாதை

அபத்தம்

அர்த்தமற்றது
பொய், பொம்மை

அபயம்

அடைக்கலம்
பாதுகாப்பு

அபராதம்

தண்டம்

அபராத வட்டி

கெடு தவறிய கடனுக்கு அபராதமாக விதிக்கப்படும் வட்டி

அபரிமிதம்

மிக அதிகம்
அளவின்மை

அபலை

ஆதரவற்ற பெண்

அபவாதம்

கெட்ட பெயர்

அபஸ்வரம்

இசைத்தன்மை கெடும் முறையில் ஒலிப்பது

அபாக்கியம்

துர்பாக்கியம்

அபாண்டம்

பொய்ப்பழி

அபாயச் சங்கிலி

ஆபத்து நேரத்தில் பயணிகள் ரயிலை நிறுத்துவதற்கு இழுக்க வேண்டிய சங்கிலி

அபாயச்சங்கு

அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி

அபாயம்

ஆபத்து

அபாயமணி

ஆபத்தை அறிவிக்கும் விதமாக ஒலிக்கும் மின்சாதனம்

அபாரம்

பாராட்டத் த்குந்த முறையில் இருப்பது,பிரமாதம்