அ - வரிசை 30 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அப்பம்மா | அப்பாவின் அம்மா |
அப்பழுக்கு | குற்றம் குறை,கறை |
அப்பளம் | எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத்தகடாக இட்டு உலரவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டம் |
அப்பன் | தந்தை |
அப்பன் பாட்டன் | மூதாதையர் |
அப்பா | பெற்றோரில் ஆண்,தந்தை |
அப்பாடா | அப்பாடி,நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்த உணர்வை வெளிப்படுத்தும் போது பயன்படுத்தும் இடைச்சொல் |
அப்பால் | வேறு புறமாக,பிறகு,அப்புறம்,தூரத்தில்,தள்ளி,தாண்டி |
அப்பாவி | கள்ளங்கபடு இல்லாத,தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர் |
அப்பாவித்தனம் | கள்ளங்கபடு இல்லாத தனம்,வெகுளித்தனம் |
அப்பாற்படு | (குறிப்பிட்ட நிலை தன்மை முதலியனவற்றிற்கு)மேம்பட்டதாக அல்லது மீறியதாக இருத்தல் |
அப்பியாசம் | பயிற்சி |
அப்பிராணி | அப்பாவி,சாது |
அப்பு | (மை சந்தனம் முதலியவற்றை)அதிகமாகப் பூசுதல் |
அப்பு | அப்பா, அப்பப்பா, அம்மப்பா, ஆண் ஒருவரை இன்னொருவர் அன்போடும் பரிவோடும் அழைக்கும் முறை |
அப்புறப்படுத்து | நீக்குதல் |
அப்புறம் | அந்தப் பக்கம்; அதன்பின் |
அப்பேர்ப்பட்ட | அந்த மாதிரியான |
அப்பொழுது | அப்போது,அந்த நேரத்தில்,குறிப்பிடப்பட்ட காலத்தின் ஒரு கட்டத்தில் |
அப்போதைக்கப்போது | உடனுக்குடன் |