அ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகட்டு | பரப்புதல் |
அகடவிகடம் | சிரிக்க வைக்கும் கோமாளிச்செயல்கள் |
அகண்ட | விசாலமான |
அகண்ட அலைவரிசை | அதிக அளவில் தகவல்களை மிக விரைவாக இணையத்தின் மூலமாக அனுப்புவதற்கும் பெறுவதற்கும் வகை செய்யும் தொழில்நுட்பம் |
அகண்ட தீபம் | நந்தா விழக்கு |
அகத்தி | கீரையாக பயன்படும் இலைகளைக் கொண்ட, கொடிக்காலில் வளர்க்கப்படும் ஒரு வகை மரம் |
அகத்திக்கீரை | அகத்தி மரத்தின் கரும் பச்சை நிற இலை |
அகத்தேர்வாளர் | இறுதித் தேர்வில் மாணவரின் திறமையை மதிப்பிட அந்த மாணவர் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்தே நியமிக்கப் படும் ஆசிரியர் |
அகத்தேர்வு | பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக மாணவர் படிக்கும் கல்வி நிறுவனமே நடத்தி மதிப்பீடு செய்யும் தேர்வு |
அகதி | ஏதிலி |
அகந்தை | இறுமாப்பு,செருக்கு |
அகநிலை | அகவயம்,[தன்னை அறிந்து கொள்ளும்] உள்நோக்கு,சொந்த உணர்ச்சிகள் அல்லது விருப்பு வெறுப்பு சார்ந்த பார்வை |
அகநோயாளி | உள்நோயாளி,மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர் |
அகப்படு | பிடிபடுதல் |
அகப்பை | நீண்ட கைபிடியுள்ள மரக்கரண்டி |
அகம் | உள்பகுதி,மனம்,உள்ளம் |
அகம்பாவம் | உண்ணினைவு |
அகம்பாவி | அகம்பாவம் பிடித்த நபர் |
அகமணம் | [மானுடவியல் வழக்கில்] ஒருவர் தம் சாதிக்குள்ளேயே செய்து கொள்ளும் திருமணம் |
அகமதிப்பீடு | தேர்வின்
|