அ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநாதை | ஆதரவிலி |
அநாதையாக | கவனிப்பார் இல்லாமல் |
அநாமதேயம் | இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை |
அநாயாசம் | கடினமானதை மிக எளிதாகச் செய்யும் லாவகம் |
அநாவசியம் | தேவையற்றது |
அநித்தியம் | நிலையற்றது |
அநியாயம் | நியாயத்துக்குப் புறம்பானது |
அநீதி | நடுவின்மை, முறைகேடு |
அநுபோக பாத்தியம் | (வீடு,நிலம்,மரம்,இயந்திரம் போன்ற சொத்துகளை ஒரு உரிமம் வழியாக) பயன்படுத்திக்கொள்ள மட்டுமே ஒருவருக்கு இருக்கும் உரிமை |
அநேகம் | பல |
அநேகமாக | பெரும்பாலும் |
அப்பட்டமாக | ஒளிவுமறைவில்லாமல்,வெளிப்படையான |
அப்படி | ஏற்கனவே குறிப்பிட்ட விதத்தில் அல்லது முறையில்,அவ்வாறு |
அப்படிப்பட்ட | முன்னர் குறிப்பிட்ட தன்மை கொண்ட,அப்படியான |
அப்படியானால் | (நிலைமை) கூறியபடி இருக்குமானால் |
அப்படியும் | இருந்தபோதிலும் |
அப்படியே | உள்ளபடியே,இருக்கிற நிலையில் |
அப்பத்தட்டி | காலை நேரத்தில் அப்பம்,தோசை போன்றவற்றைச் சுட்டு விற்கும் வீடு |
அப்பப்பா | அப்பாவின் அப்பா,தாத்தா |
அப்பம் | (ஊறவைத்து அரைத்த) அரிசிமாவில் வெல்லம் சேர்த்து எண்ணெயில் வேக வைத்த தின்பண்டம்,ஆப்பம் |