அ - வரிசை 28 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அந்தரம்

தரக்குமேல் பிடிமானம் இல்லாத நடு வெளி
ஆதரவற்ற நிலை
சங்கடம்
அவசரத் தேவை
பரபரப்பு

அந்தரி

பதற்றம் அடைதல்

அந்தலை

(தெரு போன்றவற்றின்) கோடி

அந்தலை

சேலை முதலிய நீளமானவற்றின் முடிவுறும் பக்கம்

அந்தஸ்து

தகுதி
செல்வாக்கு
கௌரவம்

அந்தாதி

முதல் பாடலின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு இயற்றப்படும் நூல்
அந்தம் என்றால் முடிவு ஆதி என்றால் தொடக்கம், இவற்றின் சேர்ர்கையே அந்தாதி. ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும்

அந்திமச் சடங்கு

அந்திமக்கிரியை,இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு

அந்தி மந்தாரை

மாலையில் பூக்கும் நீண்ட மணமுள்ள மலர்/அந்த மலரைத் தரும் சிறு குத்துச் செடி

அந்திமம்

(ஒருவருடைய வாழ்நாளில் ) இறுதிக்கட்டம்

அந்தியேட்டி

ஒருவர் மரணம் அடைந்த நாளில் இருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு

அந்துப்பூச்சி

(சேமித்து வைத்திருக்கும் நெல்லில் கானப்படும்)இறக்கையுடன் கூடிய பழுப்பு நிறப் பூச்சி

அந்துருண்டை

பாச்சா உருண்டை,(துணி,காகிதம் முதலியவற்றைப் பாச்சை போன்ற பூச்சிகள் அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்)வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை

அந்தோ

பிறருடைய துயரத்துக்கு இரக்கம் தெரிவிக்கும் முறையில் அல்லது தன் நிலைமைக்கு வருந்தும் முறையில் பயன்படுத்தும் இடைச்சொல்
அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6).

அந்நாள்

கடந்த காலம்,அந்தக் காலம்

அந்நியச் செலவாணி

ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்

அந்நியப்படு

தொடர்பு அற்றுப்போதல்,தனிமைப்படுதல்

அந்நியம்

தன்னுடையதாக இல்லாதது,தனக்குச் சொந்தம் இல்லாதது
உறவுக்கு வெளியே இருக்கும் நிலை
வேறுபாடு, வேற்றுமை

அந்நியமாதல்

அந்நியப்பட்ட நிலை,உற்பத்தியும் உற்பத்திச் செயலும் தன் கட்டுப்பாட்டில் இல்லாததால் ஒருவர் அவற்றிடமிருந்து சக மனிதரிடமிருந்தும் அந்நியமாக்கப்பட்ட நிலை

அந்நியன்

அறிமுகம் இல்லாதவன்
வேற்றாள்
வேறுபட்டவன்
அயலான்

அநாகரிகம்

பண்புக்குறைவு,பண்பாடற்ற தன்மை