அ - வரிசை 27 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அது

பேசுபவரிடமிருந்து இடத்தாலோ காலத்தாலோ தள்ளி இருக்கும் ஒன்றைக் குறிப்பிடுவதற்கும் ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பெயரைத் திரும்பக் குறிப்பிடுவதற்கும் பயன் படுத்தும் பிரதிபெயர்
அஃறிணையொருமைச்சுட்டுப்பெயர்.

அதுகாறும்

அதுவரை

அதுவரை

குறிப்பிடப்படும் அந்த நேரம்

அதுவுமாக

முதலில் வரும் பெயர்ச்சொல்லின் தன்மையை வலியுறுத்தவும்,பின்னால் வரும் வினைச்சொல்லின் செயல் முதலில் குறிப்பிடப்பட்ட பெயர்ச்சொல்லின் தன்மைக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிடப் பயன்படும் இடைச்சொல்

அதே

குறிப்பிடப்பட்ட அந்த

அதை

வீங்குதல்

அதைரியம்

துணிவு இல்லத நிலை(துணிவின்மை)

அதோ

சற்றுத் தொலைவில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்
சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679).

அதோகதி

இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை

அதோடு

முன்னர் குறிப்பிடப்படுவதோடு கூட என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களுக்கு அல்லது தொடர்ந்து வரும் இரண்டு தொடர்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்

அந்த

தூரத்தில் இருக்கிற,கடந்த,முன் நிகழ்ந்த
இரக்கக்குறிப்பு. அந்தொக்க வரற்றவோ (கம்பரா. இராவணன்சோ. 38).
காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணி. 17, 34).

அந்தகன்

பார்வை இல்லாதவன்

அந்தகாரம்

அடர்ந்த இருள்
கும்மிருட்டு

அந்தந்த

குறிப்பிட்ட ஒவ்வொரு

அந்தப்புரம்

அரண்மனையில் அரசியும் மற்ற பெண்களும் இருந்த இடம்

அந்தம்

முடிவு

அந்தர்பல்டி

நேரெதிரான நிலை

அந்தரங்கம்

மறைவடக்கம் (மறைமுகம்)

அந்தரப்படு

அவசரப்படுதல்,பதற்றப்படுதல்

அந்தரப்படுத்து

அவசரப்படுத்துதல்