அ - வரிசை 26 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிபர் | ஒரு நாட்டின் தலைமை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் தலைமை ஆசிரியர் |
அதிமதுரம் | (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்)ஒரு வகைப் பூண்டுச் செடியின் உலர்ந்த வேர் அல்லது தரைக்குக் கீழே வளரும் அதன் தண்டு |
அதிர் | விசயின் காரணமாகத் தொடர்ந்து நடுக்கம் ஏற்படுதல்/உலுக்கப்படுதல்,நடுங்கிப்போதல் |
அதிர்ச்சி | (எதிர்பாராத நிகழ்ச்சியால் நிலைகுலையும்படி)மனத்தில் ஏற்படும் பாதிப்பு |
அதிர்ச்சித்தோல்வி | வெற்றி பெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி அல்லது நபர் அடையும் தோல்வி |
அதிர்ச்சி வைத்தியம் | அதிர்ச்சி அளிக்கும் வகையில் எடுக்கும் கடுமையான நடவடிக்கை |
அதிர்ந்து | குரலை உயர்த்தி,சத்தமாக |
அதிர்வு | நுண் அசைவு, நடுக்கம் |
அதிர்வெடி | அதிர்வேட்டு,(திருவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றில்)இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி |
அதிர்வெண் | ஒரு வினாடியில் நிகழும் அலைவுகள்,அதிர்வுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை |
அதிர்ஷ்டக்கட்டை | அதிர்ஷ்டம் குறைந்தவர் அல்லது இல்லாதது |
அதிர்ஷ்டம் | குருட்டாம்போக்கு |
அதிர்ஷ்டவசம் | எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நல்ல வாய்ப்பு |
அதிரசம் | ஊறவைத்து இடித்த அரிசி மாவை வெல்லப் பாகில் கலந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கப்படும் தின்பண்டம் |
அதிரடி | எதிர்பாராத நேரத்தில் திடீரென்றும் கடுமையாகவும் செயல்படும் தன்மை |
அதிரடிப்படை | (ராணுவத்தில்,காவல்துறையில்) அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு |
அதிருப்தி | திருப்தியின்மை,மனக்குறை |
அதிருப்தியாளர் | தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை,முடிவு முதலியவை,குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெருவிப்பவர் |
அதிவிரைவுப் படை | மிக விரைந்து செயல்பட்டு சட்டவிரோதச் செயல்களை முறியடிக்கச் சிறப்புப் பயிற்சி பெற்ற படை |
அதீதம் | மிகை |