அ - வரிசை 254 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அளவு கணக்கில்லை

மிகவும் அதிகமானது என்ற குறிப்பு

அளவு தடி

புகையிலைக்கு கன்று முதலியனவற்றை சம இடைவெளிகளில் நடுவதற்று நிரைகள் அமைக்கப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட அளவினைக் கொண்ட தடி

அளாப்பி

அளாப்பும் தன்மை கொண்ட நபர்

அற் ஹோம்

தேவையொன்றுக்கு பணம் சேர்க்கும் நோக்கில் உறவினர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து நல்லுணவு பரிமாறி அவர்களின் மனவிருப்போடு அளிக்கும் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் சில சமூகத்தவர்களால் செய்யப்படும் சடங்கு

அறக்கீரை

அரைக்கீரை, தோட்ட்ங்களில் இயற்கையாக வளரும் ஒருவகைக் கீரை

அறக்குளா

அதிக ருசியானதும் விலை கூடியதுமான நீளமான மீன் வகை

அறங்கொட்டுதல்

வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனக்கு ஏதுமில்லை என்பது போல காட்டிக் கொள்ளும் தன்மை

அறணை

அரணை

அறணையன்

நினைவாற்றல் குறைந்த ஆண்

அறளை

வயது மூப்பினால் ஏற்படும் அர்த்தமற்ற பேச்சு

அறாவட்டி

நிலவும் வட்டி வீதத்திலும் பார்க்க மிக உயர்ந்த வட்டி வீதம்

அறிஞ்சவை

அறிந்தவர், தெரிந்தவர்கள்

அறிவு கெடுதல்

மயக்கமடைதல், மூடத்தனமான செயல் என்ற குறிப்பு

அறிவு நினைவு

சுயநினைவு

அறுணாக்கொடி

அரைஞாண் கயிறு, ஆண்களின் குறிப்பாக சிறு பிள்ளைகளின் இடுப்பில் கட்டப்படும் வெள்ளி அல்லது தங்கம் அல்லது கறுப்பு நூலினாலானதோர் கொடி

அறுத்தல்

கேலி செய்தல், கேட்பவர்களிற்கு ஆர்வமில்லாதவற்றை தெடர்ந்து பேசிக்கொண்டிருத்தல்

அறுதல் வேசமன்

ஆண் ஒருவரை திட்டுமொரு முறை

அறுதல் வேசை

கோபத்தில் நடத்தை கெட்ட பெண் என்ற தொனியில் ஏசுதற் குறிப்பு

அறுதலன்

ஆண் ஒருவரை ஏசுவதற்குப் பயன்படும் சொல்

அறுதலா

ஆண் ஒருவரை சுட்டி ஏசும் குறிப்பு