அ - வரிசை 253 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவிட்டு விடல்

இரகசியத்தை அம்பலமாக்குதல்

அவிழ்த்தல்

மாடு, வாகனம் முதலியவற்றைக் கொள்வனவு செய்தல்

அவுக் அவுக்கெண்டு

விரைவுக் குறிப்பு

அவுக்கென்று

எதிர்பாராத வகையில் விரைவாக

அவுக

ஒருவரை மரியாதையின் நிமித்தம் குறிப்பிடும் முறை

அவையாவை

அந்தந்த வேலைக்குரிய ஆட்கள்

அவோ

அந்தப் பெண்

அழிஞ்சு போதல்

ஒருவர் மிகவும் கெட்ட நிலைக்குள்ளாகி விட்டார் என்ற குறிப்பு

அழிஞ்சு போவாள்

திட்டுதற் குறிப்பு

அழிதல்

விற்றுத் தீர்த்தல்

அழிறப்பர்

பென்சிலால் எழுதியவற்றை அளிக்க பயன்படும் அழிப்பான்

அழுக அவிதல்

சமைக்கும் போது மரக்கறி முதலியன அதிகமாக அவிந்து போதல்

அள்ளிக் குவித்தல்

அதீதமாக சேர்த்தல்

அள்ளிக் கொண்டு போ

தொகையாக கைது செய்தல்

அள்ளிப்பிடிச்சு கொண்டு போ

மிக விரைவாக செல்லுதல்

அள்ளிப்போடுதல்

அதிகமான நகைகளை அணிதல், அதிகமான உணவினை பரிமாறுதல்

அள்ளியெறி

நன்றாக ஆடையணிந்து அழகாகயிருத்தல்

அள்ளி விசுக்கு

உரிய பலன் கிடைக்க பெறுமா என்று சிந்திக்காமல் மிக அதிகமாக செலவு செய்தல்

அள்ளிவை

கோள்மூட்டுதல், தீங்கு செய்தல்

அள்ளு கொள்ளை

பெருந்தொகை