அ - வரிசை 252 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அலக்க மலக்க

பயம், என்ன நடந்த என்று அறியாமை போன்ற உணர்வுகளுடன் அவசரமாக

அலட்டல் கேஸ்

கேட்பவருக்கு முக்கியமற்ற விடயங்களை அதிகமாகக் கதைக்கும் தன்மை கொண்ட நபர்

அலவல்

அதீத பாவனையினால் நைந்து போன ஆடை முதலியன, ஐதாக நெய்ப்பட்ட துணி முதலியன

அலவாய்ப்படல்

காரியமொன்றை ஆற்றுவதற்கு ஓரிடத்திற்கு அல்லது அது சம்பந்தப்பட்ட இடங்களிற்கு பலமுறை சென்று வருதல்

அலுங்காமல் நலுங்காமல்

கஸ்ரப்படாமல், சுகமாக

அலுப்பன்

தொந்தரவு கொடுக்கும் ஆண் என்ற குறிப்பு

அலுப்புக்கேஸ்

தொந்தரவு கொடுப்பவர், இடத்திற்கு பொருத்தமில்லாது நடப்பவர்

அலுவல் பார்த்தல்

காரியமொன்று நிறைவேற்றுவதற்கு வேண்டியவற்றை செய்தல், குறிப்பாக செல்வாக்கை பிரயோகித்தல்

அலை கொம்பன்

ஆடிக்கொண்டிருக்கும் அனால் விழாத கொம்பையுடைய காளை

அலை சோலி

தொந்தரவு

அலைஞ்சுலைதல்

கஸ்ரப்பட்டு பல இடங்களில் ஒன்றைத் தேடித் திரிதல்

அவக் அவக்கென்று

விரைவுக் குறிப்பு

அவக

ஒருவரை மரியாதையின் நிமித்தம் குறிப்பிடும் முறை, அவர்கள்

அவட்ட

அவரை, அவர்களை

அவட்டேன்ர

அவருடைய

அவர் என்ன குருவே

ஒருவர் சொல்லுவது எல்லாவற்றையும் மாற்றுக் கருத்தின்றி கேட்டுச் செயற்பட வேண்டியளவிற்கு அவர் ஒன்றும் பெரிய மனிதர் அல்ல என்ற குறிப்பு

அவருக்கென்ன

அவருக்கு எந்த குறையுமில்லை என்ற கருத்து

அவளவை

அந்த பெண்கள்

அவனைக் கேட்டுத்தான்

குறிப்பிட்ட துறையில் மிகவும் வல்லவன் என்ற கருத்து

அவிஞ்சு போதல்

நீர் மற்றும் நீர் ஆவியில் வெந்து போதல், ஏமாறுதல்