அ - வரிசை 251 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரிவாள் சத்தகம் | அரிவி வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் உடைய வளைந்த கத்தி |
அரிவி வெட்டு | முற்றிய நெற்பயிர்களை வெட்டுதல் |
அரிவு தூள் | மரம் அரியும் பொது வெளிவரும் மரத்தூள் |
அருக்காணி காட்டுதல் | ஒன்றை செய்யப் பின்னிற்றல் |
அருக்கி உருக்கி | அரும்பாடுபட்டு |
அருகல் | அருமையாகக் காணப்படல் |
அருந்தப்பு | மயிரிழையில் தப்பியமை |
அரும்பொட்டு | விளிம்பில், மட்டு மட்டாக |
அருமை கெடுதல் | தவறாக ஒன்றைக் கையாளுவதனால் அல்லது அடிக்கடி ஒன்றை செய்வதனால் உரிய முக்கியத்துவத்தை இழத்தல் |
அருமை பெருமையாக | மற்றவர்களால் மதிக்கப்படும் மற்றும் விரும்பப்படும் விதத்திலும் அளவிலும் |
அரைச்சலார் | அரைவாசி விலை |
அரைநேரம் | காலை முதல் நண்பகல் வரை அல்லது மதியம் முதல் பின்னேரம் வரை |
அரைப்பாவாடை | முழங்கால் வரை அணியும் பாவாடை |
அரையல் | சம்பல் |
அரையவியல் | அரைவாசி வெந்த உணவு |
அரை வயிறன் | அரைவாசி விளைந்த நெல் |
அரைவாசியாப் போதல் | உடல் மிகவும் நலிவடைந்து விட்டது என்ற கருத்து |
அரை வேக்காடு | பக்குவமற்ற தன்மை |
அரோகரா | விடயம் ஒன்று பிழைத்து விட்டமையினை குறிக்கும் ஒரு முறை |
அல்லாட்டா | அல்லாவிடின், இல்லாவிடின் |