அ - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அதனால்

ஆகவே,எனவே

அதாவது

எவ்வாறு என்றால்,சொல்லப்போனால்

அதிகப்படி

அலவுக்கு அதிகம்,கூடுதல்

அதிகப்படு

மிகுதல்,மேற்படுதல்

அதிகப்படுத்து

கூட்டுதல்
அதிகமாக்குதல்

அதிகப்பற்று

ஒருவருக்கு உரியதைவிடக் கூடுதலாகத் தரப்பட்டிருக்கும் தொகை

அதிகப்பிரசங்கி

தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் நபர்

அதிகப்பிரசங்கித்தனம்

தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் தன்மை

அதிகபட்சம்

உயர்ந்த அளவு
மேல்வரம்பு

அதிகம்

கூடுதல்
மிகுதி
நிரம்ப

அதிகரி

கூடுதலாக்கு
கூட்டுதல்
அதிகாரஞ்செலுத்துதல். (நன்.எழுத்.விருத்.)
அதிகாரத்தோடு பொருந்தவருதல். (நன். 21, விருத்.) கற்றல். அவைநீ அதிகரித் தறிதற்குரியை (அரிசமய. பராங்குச. 78.)

அதிகாரப்பரவல்

நிர்வாக அமைப்புகள் கூடுதல் சுதந்திரமாகச் செயல்பட, அதிகாரங்கள் ஒரு மையத்திடம் குவிந்துவிடாமல் பரவலாக்கும் ஏற்பாடு

அதிகாரப்பூர்வம்

சம்பந்தப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் அதிகாரத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரத்தை பிரதிநித்துவப்படுத்தும் Mஉறையில் ஆனது

அதிகாரம்

வகிக்கும் பதவியாலோ இருக்கும் நிலையாலோ முடிவுகளை எடுப்பதற்கும் ஆணைகளைப் பிறப்பிப்பதற்குமான உரிமை

அதிகாரி

மேலாளர்

அதிகாலை

விடிவதற்கு முன் உள்ள பொழுது
விடியற்காலை
விடியல்
வைகறை

அதிசயப்பிறவி

சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் உன்னதமான குணங்களைக் கொண்டிருப்பவர்

அதிசயம்

விந்தை
வியப்பு

அதிசயி

வியப்படைதல்

அதிபதி

முதல்வன்
தலைவன்
அதிபதி