அ - வரிசை 249 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அம்புலோதி

பொறாமையுடன் சேர்ந்த ஆசை

அம்புறோஸ்

பொய்மை உண்மை போல் திரித்து கூறும் நபர்

அம்மட்டிற்கும்

அதுவரைக்கும்

அம்மணக்குண்டி

ஆடையேதுமின்றி குறிப்பாக சிறுபிள்ளைகள் இருத்தலைக் குறிக்கும் முறை

அம்மணம் பேசுதல்

தூஷணம்

அம்மம்மாக் குழல்

சிறு பிள்ளைகளின் விளையாட்டு ஊதுகுழல்

அம்மல்

மேகம் மந்தாரமாயிருத்தல், தடிமன், தலைப்பாரம்

அம்மாக்காறி

இன்னொருவரின் தாயை குறிப்பிடும் முறை

அம்மா சுண்டல்

கடினமான சூழ்நிலையினை எதிர்நோக்குவதற்கு தன்னையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்த கூறப்படும் வார்த்தை, ஆச்சரியக் குறிப்பு

அம்மாவான

தாய் மேல் சத்தியமாக

அம்மாள் நோய்

சின்ன முத்து, கொப்பளிப்பான், கூகைக்கட்டு

அம்மாளாச்சி

அம்மன்

அம்மிக்கறி

அம்மியில வைத்து அரைத்து தயாரிக்கப்படும் சம்பல், பச்சடி முதலிய தொடுகறிகள்.

அம்மையா

தாயின் தகப்பன்

அமசடக்கி

விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள் வைத்திருக்கும் நபர்.

அமத்திக்கொண்டு போ

விரைவாக வாகனத்தை செலுத்திக் கொண்டு போதல்

அமத்தி வாசி

விடயமொன்றை விபரமாகக் கூறாமல் தந்திரமாகக் குறிப்பிடுவதன் மூலம் மற்றவர்களின் கவனம் அதன் மேல் செல்லாமலும், கோவப்படாமலும் பார்த்துக் கொள்ளல்

அமத்தி வைச்சிரு

மற்றவர்களிற்கு தெரியாமல்

அமந்தறை

மும்மரம்

அமவாசை இருட்டு

அதிக இருள்