அ - வரிசை 248 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதையேன் பேசுவான் | விடயமொன்று மிகவும் மோசமானது என்ற குறிப்பு |
அந்தமாதிரி | மிகச்சிறந்த |
அந்தர அவசரத்திற்கு | அவசர தேவைக்கு |
அந்தரிச்சுப் போதல் | வாழ்வாதரத்தினை இழந்து நிற்றல் |
அந்தவாகு | அந்த நேரத்தில் இருந்து இவ்வேளை வரை |
அந்தாள் | வயது வந்த ஆண் ஒருவரை சற்று மதிப்பாகக் குறிக்கும் முறை |
அநியாயப்படுவார் | திட்டுதற் குறிப்பு |
அப்பச்சோடா | அப்பத்தை புளிக்க வைப்பதற்காக அப்பக் கலவையில் சேர்க்கப்படும் ஒரு இரசாயன கலவை |
அப்பாச்சி | தந்தையின் தாய் |
அப்புக்காத்து | சட்டத்தரணி |
அப்படிக்கொத்த | அத்தகைய கூடாத அல்லது நல்ல தன்மைகள் |
அப்படியெண்டால் | அவ்வாறு இருந்தால், ஒருவர் குறிப்பிட்ட ஒன்றை மற்றவர் விளங்கிக் கொள்ள முடியாத போது அது எதனைக் கருதுகின்றது என்று வினவுதல் |
அப்படியொரு | மிகச்சிறந்த |
அப்புசாமி | கடவுள் |
அப்பையா | தந்தை, தந்தையின் தகப்பன் |
அப்போதிக்கரி | வைத்தியர் |
அம்சமாய் | அழகாய் |
அம்பக்கன் | ஏமாத்துக்காரன் |
அம்பலப்படுத்து | பலர் அறிய செய்தல் |
அம்பிடுதல் | அகப்படுதல் |