அ - வரிசை 247 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அண்டைக்கு

குறித்த நாளன்று

அண்ணமார்

ஒரு சிறு தெய்வத்தின் பெயர்

அண்ணன்காறன்

இன்னொருவரின் மூத்த சகோதரனை குறிக்கும் முறை

அண்ணை

அண்ணன்

அணில்வால் திணை

ஒருவகைத் திணை

அணைவு

ஆதரவு

அத்தடிப்படல்

பயிர்கள் உரிய முறையில் வளர்ச்சி அடையாது போதல்

அத்தறிப்பாஞ்சான்

சீறிப்பாய்தல்

அத்துமீறல்

நியமத்தை அல்லது கட்டளையை மீறிச் செயற்படல்

அத்தைக்காறி

இன்னொருவரின் அத்தையைக் குறிக்கும்

அத்தை வித்தையே

செய்வதற்கு மிகுந்த ஆற்றலினை வேண்டி நிற்கும் கருமமல்ல என்ற இகழ்ச்சிக் குறிப்பு

அதார்

யார் அது?

அதாலை

அந்தப் பக்கத்தால்

அதிகாரப் பணம்

தமிழ் அரசர்கள் மற்றும் ஒல்லாந்தர் முதலியோர் அறவிட்டதொரு வரி

அதிகாரி பணம்

அதிகாரி என்ற பதவியில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கென குடிமக்களிடம் இருந்து ஒல்லாந்தர் முதலியோர் அறவிட்டதொரு வரி

அதிகுதி

வெற்றிக் களிப்பினால் செருக்காக நடத்தல்

அதிர்வேட்டு

கேட்பவருக்கு வியப்பை ஏற்படுத்தும் அதிகாரமாக சொல்லப்படும் ஆணை

அதுக்கென்ன

குறிப்பிட்ட விடயமொன்றைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்து, சம்மதம் தெரிவித்தல், பரவாயில்லை

அதுதான்

அதே விடயத்தைத் தான்

அதுபாட்டிலை

எந்த தொந்தரவுமின்றி, மற்றவர்களின் உதவியின்றி தானாக