அ - வரிசை 246 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடிபிடி என நிற்றல்

சிறு விடயங்களிற்கும் கோவப்படும் அல்லது சண்டைக்கு வரும் தன்மை

அடியடா சக்கையெண்டானாம்

செய்தி ஒன்றைக் கேள்விப்படும் பொழுது அது தொடர்பில் அளப்பெரிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் முறை

அடியடாபிடியடா என வருதல்

ஒருவர் விடயமொன்று தொடர்பில் எதிர்பினை வெளிப்படுத்துவதை இன்னொருவர் குறிப்பிடும் முறை

அடியளித்தல்

பெண்கள் முழங்காலில் இருந்து நெற்றியை நிலத்தில் முட்டி கோயிலைச் சுற்றிக் கும்பிடுதல்

அடீக்

நாயை விரட்டும் முறை

அடியிலும் மிதிக்காமை

உறவு ஏதும் வைப்பதற்கில்லை என்ற குறிப்பு

அடுக்கணியம்

ஒன்றைச் செய்வதற்கு தேவையானவை

அடுக்குப் பார்த்தல்

பொருட்கள் சரியாக உள்ளனவா எனப் பார்த்தல்

அடுக்கு மொந்தன்

சிறிய நெருக்கமான அதிக காய்களையுடைய கொண்டதொரு கறிவாழை வகை

அடுகண்டு

நட்ட கன்றுகள் பட்டுப் போனால் மீள் நடுகை செய்யும் நோக்கில் சில பகுதிகளில் இரு கண்டுகளை நடுதல்

அடுகிடை படுகிடையாகக் கிடத்தல்

தன் நிலையில் இருந்து இறங்கிஇன்னொருவருடன் மிக நெருக்கி இருத்தல்

அடுத்தல்

சேர்த்து வைத்துக்கொள்ளல்

அடைகுளம்

நீர் வருவதற்கு வழியுள்ள, ஆனால் வெளியேறிச் செல்வதற்கு வழியில்லாத, குளம்

அடைஞ்சு வைத்தல்

அமுக்கி, திணித்து, நெருக்கி வைத்தல்

அடையப்பா

ஆண் ஒருவரை அவரது சம அந்தஸ்தில் அல்லது உயர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் விழிக்கும் முறை.

அண்டண்டாடு

தினசரி

அண்டண்டைக்கு

அந்தந்த நாளுக்கு

அண்டப்புளுகி

நம்பமுடியாத விடயங்களை அதிகமாக பேசுபவர்

அண்டலித்தல்

அண்டிப் பழகுதல், சேர்ந்து செயற்படல், கூடிப் பழகுதல்

அண்டிவிடுதல்

கோள் சொல்லுதல்