அ - வரிசை 245 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அட்டோலம்

பெயர் புகழுக்காக மேற்கொள்ளப்படும் ஆடம்பரம்

அடக்க ஒடுக்கமான

மரியாதையும் நற்பண்பும் கொண்ட

அடக்கமாக இருத்தல்

அதிகம் பேருக்கு (தன்னை) விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் வாழும் பண்பு

அடக்கியொடுக்குதல்

அடிமைபோல் நடாத்துதல்

அடங்கிலும்

எல்லா இடத்திலும்

அடசி

ஒழுங்கின்றி திணித்தல்

அடாத்தாக

உரியவரின் அனுமதி மற்றும் விருப்பம் இன்றி

அடிக்க வருதல்

உறுதியாக மறுத்தல்

அடிக்கழுவுதல்

மலம் கழித்தபின் கழுவுதல்

அடிச்சிரட்டை

கீழ்பாதி தேங்காயை திருவிய பின் காணப்படும் சிரட்டை

அடிச்சுக்குடு

இன்னொருவருக்கு மிகவும் கஷ்ரப்பட்டு வேலை செய்து கொடுத்தல்.

அடிச்சுக் கொளுத்து

ஒன்றை பற்றி அதிகம் பேசுதல்

அடிச்சுச் சொல்லு

உறுதியாக கூறுதல்

அடிச்சுத் தொட்டு

ஒருவரது கையில் மற்றவர்கள் அடித்து விட்டு ஓட முதலாமவர் அவர்களை துரத்தித் தொட்டு விளையாடும் ஒரு சிறுவர் விளையாட்டு

அடிச்சுப் பிடிச்சு

ஒன்றைச் செய்வதற்கு வரிசையில் நிற்றல் போன்ற ஒழுங்கு முறைகளைப் பின்பற்றாமல் இடிபட்டு முன்னுக்கு சென்று காரியம் ஒன்றை ஆற்றுதல்

அடிச்சு மூடு

செயற்பாடு ஒன்றை உறுதியாக முடிவுக்குக் கொண்டு வரல்

அடிச்சு விலத்தேலாத சனம்

அடித்துக்கூட விலத்த முடியாத அளவு பெரும் சனக்கூட்டம் என்ற கருத்து

அடிச்சோடி

ஒருவரது கையில் மற்றவர்கள் அடித்து விட்டு ஓட முதலாமவர் அவர்களை துரத்தி பிடித்து விளையாடும் ஒரு சிறுவர் விளையாட்டு

அடி செருப்பால

விடயமொன்றை கேள்விப்பட்டவுடன் அது தொடர்பில் தனது வெறுப்புடன் கலந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறை

அடி நுனி தெரியாது

ஒன்றைப் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்ற குறிப்பு