அ - வரிசை 244 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அங்கினேக்கை | ஏறத்தாள அவ்விடத்தில். ளுழஅநறாநசந வாநசந. உ-ம்: அங்கினேக்க போய் தேடிப்பாருங்கோ. ஒத்தசொல்: அங்க, அங்கின, அங்கினை, அங்கினேக்கை, அங்கை. |
அங்கினை | பார்க்க: அங்கினேக்கை |
அங்கொடைக் கேஸ் | பைத்தியம். அங்கொடையென்ற இடத்தில் மன நல வைத்தியசாலை இருப்பதனால் இங்கு போகவேண்டியவர் என்ற கேலிக் குறிப்பு. உ-ம்: அந்த அங்கொடைக் கேஸின்ர கதையைக் கேக்காதீங்கோ. |
அச்சரக்கட்டு | பார்க்க: அச்சரக்கூடு. |
அச்சரக்கூடு | அச்சரத் தகட்டினை வைக்கும் கூடு. உ-ம்: நகைக் கடையில அச்சரக்கூடு வாங்கலாம். ஒத்தசொல: அச்சரக்கட்டு |
அச்சரத்தகடு | அச்சரக்கூட்டினுள் வைக்கப்பட்டிருக்கும் நோய், நாவூறு முதலியவற்றிலிருந்து பாதுகாக்கும் மந்திரத் தகடு. உ-ம்: பிள்ளைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகுது. அச்சரத்தகடு ஒண்டு கட்ட வேணும். |
அச்சறுக்கைப்படுத்து | எச்சரித்தல் உ +ம் : மாடுகளை அவிட்டுவிட்டா நடவடிக்கை எடுப்பன் எண்டு விதானையார் அச்சறுக்கைப்படுத்தினார் |
அச்சுக்குத்தி | வண்டிலின் இரு பக்க சில்லுகளையும் இணைத்து நிற்கும் இரும்பிலான அச்சினை மூடியுள்ள வைரமான மரக்குற்றி. உ+ம்: அச்சுக்குத்திக்கு நல்ல மாமரத்துண்டு ஒண்டு தேவையாகக் கிடக்கு. எங்கையேன் சந்திச்சாச் சொல்லுங்கோ. ஒத்த சொல்: அச்சுக்குற்றி |
அச்சுக்குற்றி | பார்க்க: அச்சுக்குத்தி |
அச்சுப்பலகாரம் | சிப்பி சோகி போன்ற வடிவங்களில் பலகாரம் வரக்கூடியவாறு அமைந்த அச்சில், மாக்கலவையை பிழிந்து பொரித்து தயாரிக்கப்படும் ஒருவகை இனிப்பு பலகாரம். உ+ம்: கலியாண வீட்ட வாறாக்களுக்கு பாக்கில் போட்டுக்குடுக்க அச்சுப்பலகாரமும் ஓடர் பண்ணியிருக்கு. |
அச்சுப்பாண் | நீள் சதுர வடிவத்தில் இருக்கும் உட்பக்கம் மென்மையான பாண் |
அச்சுரிச்சு | அதேபோன்று தோற்றத்தைக் கொண்டு காணப்படல் |
அச்செழுத்து | மிக அழகான கையெழுத்து |
அசல் ஆம்பிளை | திடகாத்திரமும் வசீகரமுமான ஆண் |
அசுகிடை | சிறு அறிகுறி |
அசைக்கேலாது | விஞ்சமுடியாது |
அசையாது | மிக உறுதியான நீண்ட காலத்திற்கும் இருக்கும் |
அசையாமல் இருத்தல் | பல்தரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டும் சற்றும் தளராத மனப்பாங்கு. |
அஞ்சேத்திக்கும் பெறுமதியில்லாத | ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத. ஒரு சிறு பெருமதிதானும் இல்லாத |
அட்டட்டாரே | விருப்பப்படாத ஒன்று எதிர்பாராத முறையில் இடம்பெறும் போது சொல்லும் ஒரு குறிப்பு |