அ - வரிசை 243 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அக்காச்சி

அக்கா

அனன்

கொண்டவன்

அத்யாத்மிகம்

உள்ளொளிப்பயணம்

அலமரு

சுழல்
மனஞ்சுழல்
அஞ்சு
வருந்து
நடுங்கு, அசை

அலமரு-தல்

அஞ்சு
வருந்து

அருவு-தல்

அறுத்தொழு குதல்
துன்பப் படுத்துதல்
மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல்
கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது

அகத்துறிஞ்சல்

உறிஞ்சல்

அமையம்

பொழுது; ஏற்றசமயம்; உரியகாலம்
அம(மை)யம்; இலாமிச்சை

அக்காக்காறி

இன்னொருவரின் மூத்த சகோதரியினை குறிக்கும் முறை. உ-ம்: பெட்டையின்ர அக்காக்காறிக்கு இந்த சம்பந்தம் விருப்பமில்லையாம்.

அக்காத்தை

அக்கா. உ-ம்: “அக்காத்தை வள்ளியம்மை சுக்கான் பிடிக்க – ஏலெலோ கப்பல் ஏலஏலோ” (தீத்தத் திருவிழாக் கப்பல் பாட்டு வரி). (அருகிவரும் சொல்)

அக்கிராசனார்

ஓர் அமைப்பின் தலைவர். உ-ம்: அப்பா படிக்கேக’க மாணவர் சங்கத்தில் அக்கிராசனரா இருந்தவர். (வழக’கொழிந்த சொல்).

அக்கை வெக்கை

பொறாமை கலந்த கோபம். உ-ம்: தன்ர ஆக்களைப் பற்றிஅ வன் புகழ்ந்து கதைச்சது மனிசிக்காறிக்கு அக்கை வெக்கையாப் போச்சு.

அகிழான்

அகழான்.

அங்க

பார்க்க: அங்காலை 1

அங்கத்தையான்

அவ்விடத்தைச் சேர்ந்த. உ-ம்: 1. அங்கத்தையான் சேன’மாரைக் கொண்டந்தா திறமாச் செய்வாங்கள். உ-ம்: 2. அங்கத்தையான் சாமான் எண்டாக் கனகாலம் பாவிக்கும்.

அங்கதான் உதைக்குது

ஒரு விடயத்தில் முன்னேறுவதற்கு இடைஞ்சலாக ஒன்று இருப்பதனைக் குறிக்கும் முறை. உ-ம்: எல்லாம் பொருத்திச் சரிவந்திற்றது. ஆனாப் பெட்டை, சீதனம் கேக்கிற மாப்பிளை எண்டாத் தனக்கு வேணாம் எண்டு நிக்கிறாள். அங்கதான் உதைக்கிறது. ஒத்தசொல்: உதைக்குது.

அங்கால

பார்க்க: அங்காலை.

அங்காலை

1. அங்கு. உ-ம்: அங்காலை நல்ல மழை பெய்திருக்கு. எங்கட ஊரில ஒரு துளியும் விழேல்ல. 2. அப்பக்கம். உ-ம்: வேலிக்கு அங்கால பாருக்கோ. ஒத்தசொல்: அங்கால

அங்கின

பார்க்க: அங்கினேக்கை

அங்கினேக்க

பார்க்க: அங்கினேக்கை.