அ - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அத்தியாயம் | நூலின் உட்பிரிவு |
அத்தியாவசியம் | தேவை, அடிப்படையானது |
அத்திவாரம் | அடி, அடிமரம் |
அத்து | எல்லை |
அத்துடன் | அதோடு,முன்னர் குறிப்பிடப்பட்டதுடன் சேர்த்து |
அத்துப்படி | எல்ல விவரங்களும் அறிந்த நிலை |
அத்துமீறு | தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல் |
அத்துவானம் | மனித நடமாட்டம் குறைவான இடம் |
அத்தை | தந்தையின் சகோதரி/தாய் மாமனின் மனைவி/மாமியார் |
அதக்கு | மெல்லாமல் வாயில் ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளுதல் |
அதட்டல் | குரலில் வெளிப்படுத்தும் கண்டிப்பு |
அதட்டி உருட்டி | அதிகாரத்தோடும் கண்டிப்போடும் மிரட்டி |
அதட்டு | அதிகாரமாக உரத்த குரலில் பணித்தல் அல்லது கண்டித்தல் |
அதர் | காட்டு வழி,ஒற்றையடிப்பாதை/பள்ளம் |
அதர்மம் | அறத்திற்கு புறம்பானது/தர்மம் அல்லாதது |
அதரம் | உதடு |
அதல் | சுமார் இரண்டு அடி நீளத்தில் அகலமாகவும்,செதிள்களோடும் இருக்கும்(உணவாகும்) பழுப்பு நிறக் கடல் மீன் |
அதலபாதாளம் | அளவிடமுடியாத ஆழம் அல்லது பள்ளம் |
அதற்குள் | எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே என்ற பொருளில் வரும் இடைச்சொல் |
அதன் | அது என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது பயன்படுத்தப்படும் வடிவம் |