அ - வரிசை 235 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அட்டவணை | வரிசைக்குறிப்பு |
அட்டாதுஷ்டம் | அடாததுஷ்டத்தனம் |
அணங்கு | பெண் |
அணம் | அணரி |
அணல் | கீழ்வாய் |
அணவு | நடு |
அணிவிரல் | மோதிரவிரல் |
அணிகம் | சிவிகை |
அக்கினிசாட்சியாய் | அக்கினி சாட்சியாய் மணந்தான். (Colloq.) |
அங்கிட்டு | அவ்விடத்தில். அங்கிட்டுப் பிறந்து (ஈடு, 6,8, 11). (vul.) |
அங்கோடிங்கோடு | அங்குமிங்கும். (ஈடு, 1,4,9.) |
அடங்க | முழுவதும். வயலடங்கக் கரும்பும் (ஈடு, 8, 9, 4) |
அக்கிராசனம் | முதலிருக்கை |
அமளி துமளி | பலரும் சேர்ந்து ஒரே வேலையைச் செய்வதால் ஏற்படும் |
அமளி பண்ணுதல் | குழப்பம் உண்டாக்குதல் |
அம்பலப்படுத்துதல் | பலரும் அறியச்செய்தல் |
அலைக்கழித்தல் | அலைத்து வருத்துதல் |
அவசரக் குடுக்கை | ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன் |
அள்ளி இறைத்தல் | அளவுக்கு மேல் செலவழித்தல் |
அள்ளி இறைத்தல் | பணம் பொருள் முதலியனவற்றை மிக அதிகமாக செலவு செய்தல் |