அரவு | தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1). |
அள் | பெண்பால் விகுதி அவள் வந்தனள் |
அர் | பலர்பால் விகுதி. அரசர் வந்தனர் உயர்வுப்பன்மை விகுதி. சம்பந்தர் பாடினர் பகுதிப்பொருள் விகுதி. முன்னர் (குறள், 435) |
அன் | Verb-ending: (a) of the rational class in the 3rd (pers. sing. masc.) as in அவன் வருவன் (b) of the 1st (pers. sing.) as in யான் வருவன் ஆண்பால் வினைவிகுதி தன்மை யொருமை வினைவிகுதி. Noun (suff.) (a) of the rational class (masc. sing.) as in மலையன் (b) of a participial noun, (masc. sing.) as in வருபவன் ஆண்பாற் பெயர் விகுதி ஆண்பால் வினையாலணையும் பெயர்விகுதி. An euphonic augment as in ஒன்றன்கூட்டம் - சாரியை |
அன்னாய் | ஓர் அசைநிலை. அன்னாய்பின்னனவத்தைப்படும் (சி.சி.பர.சௌத்.மறு.8). |
அடித்துக்கொள்ளு | அறைந்து கொள்ளுதல். தலையில் அடித்துக்கொண்டாள். தடுத்துரைத்தல். அது செய்யத் தகாதென்று முன்னமே அடித்துக் கொண்டேன் சண்டையிடுதல். இருவரும் வீணே அடித்துக்கொள்ளுகிறர்கள் |
அளறுபடு | சேறாதல் நிலைகலங்குதல். இராவணனை யளறூபட வடர்த்தானிடம் (தேவா.1026, 8) |
அல்கு | சுருங்குதல் தங்குதல். (பிங்.) நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.) அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய்... பழனங்களே (திருக்கோ.249). |
அழன் | பிணம். (தொல்.எழுத்.354) பேய். (பிங்.) |
அப்பிரமண்ணியம் | உதவி வேண்டிக்கூறும் குறிப்புமொழி. (கலிங்.455, புது.) |
அப்புதல் | பொருளை அபகரித்தல் |
அரிணி | அருணி |
அன்னியம் | 100000000000000000 |
அட்சி | கண் மீனாட்சி |
அஷ்டலட்சுமி | எண்வகையிலக்குமி தனலட்சுமி தானியலட்சும தைரியலட்சுமி சௌரியலட்சுமி வித்தியாலட்சுமி கீர்த்திலட்சுமி விசயலட்சுமி இராச்சியலட்சுமி |
அஷ்டலோகபஸ்பம் | பொன் வெள்ளி செம்பு இரும்பு வெண்கலம் தரா வங்கம் |
அஷ்டவருக்கம் | சீரகம் கருஞ்சீரகம் சுக்கு மிளகு திப்பிலி இந்துப்பு பெருங்காயம் ஓமம் |
அஷ்டாதசமூலம் | கொடிவேலி எருக்கு நொச்சி முருங்கை மாவிலங்கை சங்சங்குப்பி தழுதாழை குமிழ் பாதிரி வில்வம் கண்டங்கத்தரி கறிமுள்ளி சிற்றாமல்லி பேராமல்லி வேர்க்கொம்பு கரந்தை தூதளை நன்னாரி |
அஷ்டாதசோபபுராணம் | அஷ்டாதச-உப-புராணம் உசனம் கபிலம் காளி சனற் குமாரம் சாம்பவம் சிவதன்மம் சௌரம் தூருவாசம் நந்தி நாரசிங்கம் நாரதீயம் பராசரம் பார்க்கவம் ஆங்கிரம் மாரீசம் மானவம் வாசிட்டலைங்கம் |
அட்டம்பாரிக்க | பருக்க பக்கஞ்சார்ந் துசெல்ல அட்டம் |