அ - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அணுகுண்டு | அணுவைப் பிளப்பதால் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு |
அணுகுமுறை | 1.ஒன்றைச் செய்ய அல்லது ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண மேற்கொள்ளும் வழிமுறை 2.கண்ணோட்டம் |
அணுசக்தி | சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ இணக்கும்போதோ வெளிப்படும் சக்தி |
அணுநிறை | ஒரு தனிமத்தின் ஓர் அணுவானது கார்பன்-12 அணுவின் பன்னிரன்டில் ஒரு பங்கு நிறையைவிட எத்தனை மடங்கு அதிகமாக உள்ளதோ அந்த எண்ணிக்கை |
அணுமின் உலை | மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் அணு உலை |
அணுமின் நிலையம் | அணுசக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம் |
அணை | ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கி வைக்கும் அமைப்பு |
அணைக்கட்டு | ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கி வைக்கும் அமைப்பு |
அணைகயிறு | (பால் கறக்கும்போது உதைக்காமல் இருக்க) மாட்டின் பின்னங்காள்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு |
அணைத்து | இறுக்கமாக,சேர்த்து,அரவணைத்து,அனுசரித்து |
அணைப்பு | தழுவுதல் |
அணைபோடு | (ஒருவருடைய விருப்பத்திற்குத்)தடையாக இருத்தல் |
அத்தகைய | முன்னர் கூரப்பட்டது போன்ர,அதைப் போன்ர |
அத்தர் | ரோஜா,மல்லிகை முதலிய மலர்களில் இருந்து எடுக்கப்படும் ஓர் வாசனைத் திரவியம் |
அத்தனை | அந்த அளவு,அவ்வளவு |
அத்தாட்சி | உண்மையை நிரூபிக்கும் சான்று |
அத்தான் | 1.தாய்மாமனின் அல்லது அத்தையின் மகன்/அக்காவின் கணவன் 2.மனைவி கணவனை அன்புடன் அழைக்கும் சொல் |
அத்தி | கொத்துக்கொத்தாகப் பழுத்திருக்கும் சிவப்பு நிறப் பழங்களைத் தரும் மரம் |
அத்தி பூத்தாற்போல் | மிக அரிதாக,அபூர்வமாக |
அத்தியட்சகர் | கண்காணிப்பாளர் |