அ - வரிசை 227 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அக்கபாடு

மரக்கலச் சேதம்

அக்கமாலை

சிவமணிமாலை

அக்கரகாரம்

மருந்து வேர்

அக்கரைப்பச்சை

பொய்த் தோற்றம்

அக்கரோட்டு

மரவகை

அக்காரடலை

சக்கரைப் பொங்கல்

அக்காரவடிசில்

சர்க்கரைப் பொங்கல் வகை

அக்காரை

சிற்றுண்டி வகைகளில் ஒன்று

அக்கிக்கல்

ஒரு ரத்தினம்
ஒரு படிக வகை

அக்கிச்சூர்

கண்ணோய்
அக்கிப்படலம்

அக்கியெழுதுதல்

அக்கிப் புண் தீரச் செங்காவிக் குழம்பால் சிங்க நாய் உருக்கள் எழுதுதல்

அக்கிரசன்

தமையன்

அக்கிரசாலைப்புறம்

அந்தணரை உண்பிக்கும் சாலைக்கு விடப்பட்ட மானியம்

அக்கிரதாம்பூலம்

முதலில் கொடுக்கும் தாம்பூல மரியாதை

அக்கினிகோத்திரம்

நாடோறும் செய்யும் ஓமவிசேடம்

அக்கினி பாதை

தீயால் நேரும் கேடு

அலேகம்

ஒலை

அலத்தி

மின்மினி

அசினம்

தோல்

அசுணமா

அசுணம்