அ - வரிசை 226 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகற்றம் | அகலம் |
அகன்பணை | அகன்ற மருத நிலம் |
அகனைந்திணை | குறிஞ்சி,முல்லை முதலிய ஐந்திணை |
அகன்றிசைப்பு | யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம் |
அகாடி | குதிரை முன்னங்காற்கயிறு |
அகாமவினை | அபுத்திபூர்வமான செயல் |
அகிதலம் | பாதாளம் |
அகிற்கூட்டு | ஏலம், கருப்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு |
அகுசலவேதனை | துக்க உணர்ச்சி |
அகுதார் | உரிமையாளி |
அகுதை | ஓர் ஈகையாளன் |
அகுரு | வெட்டிவேர் |
அகுவீனன் | தாழ்ந்த குலத்தில் தோன்றியவன் |
அகுளுதி | வேப்பமரம் |
அகைதல் | கிளைத்து எரிதல் |
அகைப்பு | எழுச்சி |
அகோரத்திரம் | பகலும் இரவும் |
அக்கசாலையர் | கம்மியர் |
அக்கச்சி | தமக்கை |
அக்கப்பறை | அலைகை |