அ - வரிசை 225 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகவலன் | பாடும் பாணன் |
அகவலைப்படுத்தல் | வலையில் அகப்படுதல் |
அகவா | ஒலித்தலைச் செய்யா |
அகவாட்டி | மனையாள் |
அகவாயில் | மனம் |
அகவாய் | உள்ளிடம் |
அகவாளன் | வீட்டுக்காரன் |
அகவிதழ் | உள்ளிதல் |
அகவிரல் | விரலின் உட்புறம் |
அகவிருள் | மெய்யறிவின்மை |
அகவிலை | உள்ளிதழ் |
அகவுநர் | ஆடுவோர் |
அகவுவம் | பாடுவோம் |
அகழான் | ஒருவகைப் பேரெலி |
அகழ்தல் | தோண்டுதல் |
அகளங்கம் | குற்றமின்மை |
அகளம் | களங்கமின்மை |
அகற்சி | அகலம் |
அகற்பன் | ஒப்பில்லாதவன் |
அகற்ப விபூதி | இயற்கையில் உண்டான விபூதி |