அ - வரிசை 223 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகத்தீடு | கையால் உள்ளணைக்கை |
அகத்து | நடுவண் |
அகத்துழிஞை | கோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை |
அகத்தொண்டர் | வீட்டுப் பணியாளர் |
அகத்தோர் | உள்ளிருப்போர் |
அகநாடக உரு | அகக்கூத்தின் வண்ணம் |
அகநாழிகை | கருப்பக்கிருகம் |
அகநிலைப்பசாகம் | சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது |
அகப்படுதல் | உட்படுதல் |
அகப்படை | அந்தரங்கப் பரிகரம் |
அகப்பணி | மனத்தொழில் |
அகப்பரிவாரம் | வீட்டு வேலைகாரர்கள் |
அகப்பாடு | உண்ணிகழ்ச்சி |
அகப்பாட்டாண்மையன் | மனமொத்த நண்பன் |
அகப்பாட்டு | அகநானூறு |
அகப்பாட்டு வண்ணம் | இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம் |
அகப்புறக்கைக்கிளை | காமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது |
அகப்புறச்சமயம் | பாசுபதம் |
அகப்புறத்திணை | அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை;பெருந்திணை முதலியன |
அகப்புறமுழவு | எழுவகை முழவுகளுள் ஒன்று |