அ - வரிசை 222 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலைமருவி | ஒத்திசை |
அசைவூட்டம் | சலனப்படம் |
அஃகுப்பெயர் | நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம் |
அன்மை | அற்றுப்போதல் |
அந்தணன் | சான்றோன் |
அசுணம் | இசையறியும் பறவை |
அளகம் | முன்னுச்சி முடி |
அற்றம் | அச்சம் |
அம்புலிமாமா | நிலா |
அதிஸ்டம் | நல்வாய்ப்பு |
அகதங்காரன் | மருத்துவன் |
அகதம் | குளிகை |
அகதன் | நோயிலி |
அகத்தடிமை | அணுக்கத் தொண்டு |
அகத்தடியள் | வீட்டு வேலைக்காரி |
அகத்தன் | இடத்தினன் |
அகத்தார் | உள்ளிடத்திலிருப்பவர் |
அகத்திணைப்புறம் | கைக்கிளையும் பெருந்திணையும் |
அகத்தியல் | உள்ளத்தியற்கை |
அகத்திருத்துவம் | செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை |