அ - வரிசை 221 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரிமா | காட்டில் வாழக்கூடிய ஒரு வகை விலங்கு இதை வடமொழியில் சிம்ஹம் (அ) சிங்கம் என்று அழைக்கப்படும். |
அரசர் | மன்னர் |
அஞ்சுதல் | பயப்படுதல் |
அழைத்தல் | கூப்பிடுதல் |
அனாவிருட்டி | விருஷ்டி |
அஃகல் | நுணுகுதல் |
அஃகாமை | குறையாமை |
அஃதை | திக்கற்றவர் |
அகக்கர்ணம் | மனம் |
அகக்காழ் | மரத்தின் உள்வயிரம் |
அகங்காரக்கிரந்தி | ஆணவ மறைப்பு |
அகசை | பார்வதி |
அகச்சமயம் | சைவ சமயத்தின் உட்சமயம் ஆறு |
அகட்டுதல் | அகலவைத்தல் |
அகணம் | கணியாதது |
அகணிகம் | கணிக்கப்படாதது |
அகணிப்பாய் | மூங்கிற் பாய் |
அகண்ட பரிபூரணம் | வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல் |
அலோபதி | ஆங்கில மருத்துவ முறையையே; ஹானிமன்(C.F.S. Hahnemann) இப்பெயரிட்டார் |
அழுக்காறு | பொறாமை |