அ - வரிசை 22 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அண்மைய

அண்மைக் கால,சமீபத்திய

அணா

ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு

அணி

(ஆடை அணிகலன் முதலியவற்றை)உடலில் தரித்தல்,பொருத்துதல்,போடுதல்
(திருநீறு,சந்தனம் போன்றவற்றை)பூசுதல்
செய்யுளின் பொருளைச் சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழு

அணிகலன்

நகை அல்லது அது போன்ற பிற அலங்காரப் பொருள்

அணிசெய்

அழகைக் கூட்டுதல்

அணிசேர்

(அணியில்,குழுவில்)இணைதல்,சேர்தல்

அணிந்துரை

புகழ்பெற்ற ஒரு நூலுக்கு ஒருவர் தரும் அறிமுகம்

அணில்

முதுகில் மூன்று அல்லது ஐந்து கோடுகள் கொண்ட மரங்களில் வாழும் ஒரு சிறு பிராணி
ஓர்வகைவெள்ளரி

அணிவகு

(முக்கியமான நிகழச்சி, விழா போன்றவற்றின் போது படைவீரர்,மாணவர் போன்றோர்) சீரான முறையில் ஒன்று கூடுதல்
குழுவாகத் திரளுதல்

அணிவகுப்பு

(முக்கியமான நிகழச்சி, விழா போன்றவற்றின் போது படைவீரர்,மாணவர் போன்றோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை,ஒழுங்கு

அணிவகுப்பு மரியாதை

குடியரசுத் தலைவர்,பிரதமர் போன்றோர்க்கு அல்லது வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அல்லது காவல் துறையினர் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை

அணு

மிகச் சிறிய கூறு
வேதியல் மாற்றத்துக்கு உட்படக்கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு
அணுச்சைவம்
பதி னாறுசைவத்தொன்று. அணுரூபம்
அணுரூபி
கடவுள். (ஞா. 2.)

அணு ஆயுதம்

அணுசக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்க்கருவி

அணு உலை

அணுசக்தியை உற்பத்தி செய்யும் சாதனம்

அணு எண்

(தனிமங்களை அட்டவணைப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கொள்ளும்)அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை

அணுக்கம்

(உறவில்,நட்பில்) நெருக்கம்

அணுக்கரு இணைவு

இரண்டு லேசான அணுக்கருக்கள் இணைந்து புதிய அணுக்கருவை உண்டாக்குவதன் மூலம் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு

அணுக்கரு பிளவு

பளுவான தனிமத்தின் அணுக்கரு பிளவுற்றுப் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு

அணுக்கழிவு

அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு நிறைந்த கழிவுப்பொருள்

அணுகு

அருகில் செல்லுதல்,நெருங்குதல்
நாடுதல்
கொள்கை முறையில் ஒன்றை நோக்குதல்