அ - வரிசை 219 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகோத்திரம் | குலமின்மை |
அகோபிலம் | 'சிங்கவேள் குன்றம்' என்னும் திருப்பதி |
அகோராத்திரம் | பகலுமிரவும் |
அகோரை | இரண்டரை நாழிகைக் காலம் |
அக்கசாலை | கம்பட்ட சாலை |
அக்கடி | அலைவு |
அக்கணம் | அந்தநிமிஷம் |
அக்கணா | தான்றிமரம் |
அக்கதேவி | சோனைப் புல் |
அக்கந்தம் | தான்றிமரம் |
அக்கந்து | நெற்குவைப் புறத்து விலக்கியபதர் |
அக்கபாடம் | மற்களரி |
அக்கப்பாடு | மரக்கலச்சேதம் |
அக்கம் | தானியம் |
அக்கரம் | அட்சரம் |
அக்களி | மனமகிழ |
அக்கன் | நாய் |
அக்காரம் | சருக்கரை |
அக்கியானம் | அஞ்ஞானம் |
அக்கிரம் | நுனி |