அ - வரிசை 217 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிர்ஷ்ட வசம் | தற்செயலாக வாய்க்கும் நன்மை. |
அபிலாஷை | விருப்பம். |
அபேஸ் | திருடிக்கொண்டு போதல் : கவர்தல். |
அப்பட்டம் | தெளிவாகத் தெரிதல். |
அம்போ என்று | ஆதரவு அற்ற நிலை. |
அரக்கப்பரக்க | அவசரமாக. |
அரணாக்கயிறு | அரைஞாண். |
அர்த்த ராத்திரி | நள்ளிரவு. |
அலக்காக | அப்படியே முழுவதுமாக. |
அல்லாட்டம் | திண்டாட்டம். |
அஷ்டமத்துச்சனி | வேண்டாத தொல்லை : துன்பம். |
அகப்பாட்டுறுப்பு | The twelve members of அகப்பொருள் |
அகப்பொருள் | அகம்(mind) + பொருள் |
அகமம் | மரப்பொது |
அகமார்க்கம் | முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து |
அகம்மியம் | அணுகக் கூடாதது |
அகம்மியை | பொதுமகள் |
அகரிஷணம் | வெறுப்பு |
அகர்த்தா | செய்கையற்றவன் |
அகலிகை | அகலியை |