அ - வரிசை 216 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநுபல்லவி | தொடுப்பு |
அதீத | விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது) |
அகடிதம் | பொல்லாங்கு |
அகலக்கால் வைத்தல் | சிந்தனையின்றி இறங்குதல். |
அகஸ்மாத்தாக | தற்செயலாக : எதிர்பாராதவாறு. |
அக்கம் பக்கம் | சுற்றியிருக்கும் பகுதி. |
அக்குவேறு ஆணிவேறு | பல கூறாக. |
அங்கவஸ்திரம் | அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு. |
அங்குமிங்குமாக | பரவலாகயிருத்தல். |
அசடுவழிதல் | முட்டாள் தனம். |
அசத்துதல் | திணரச் செய்தல். |
அசந்து பேசுதல் | திகைத்தல் : அதிர்ச்சியடைதல். |
அசைபோடுதல் | பழைய நினைவுகளில் ஆழ்தல். |
அடங்காப் பிடாரி | கட்டுக்கு அடங்காத நபர். |
அடுத்தடுத்து | ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203) |
அடிபடுதல் | பேசப்படுதல் : அனுபவம் பெறுதல். |
அடிபோடுதல் | முனைதல் : முயற்சித்தல். |
அடிமுட்டாள் | மூடன். |
அதிக பட்சம் | பெரும்பாலும். |
அதிகப் பிரசங்கி | தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர். |