அ - வரிசை 215 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அருத்தநாரீசுவரன் | உமையொரு பாகன் |
அலரவன் | நான்முகன் |
அவநிகேள்வன் | திருமால் |
அழல்வண்ணன் | சிவன் |
அறவாணன் | கடவுள் |
அறன்மகன் | தருமன் |
அறிவன் | நல்லறிவுடையோன், இறைவன், சிவன், திருமால், அருகன் |
அறிவாகரன் | மிகுந்த கல்வி அறிவை உடையவன் |
அற்புதமூர்த்தி | கடவுள் |
அனிவன் | வாயுதேவன் |
அன்பரசன் | பணிவுள்ளம் கொண்டவன் |
அன்பழகன் | அன்புடைய அழகன் |
அகராதிக்கிரகம் | அகரம் முதலாக வரும் முறை |
அக்னி | நெருப்பு, தீ |
அபிடேகம் | திருமுழுக்கு |
அபூர்வ | அரிய |
அர்ப்பணிக்கிறேன் | உரித்தாக்குகிறேன் |
அதிர்ஷ்டவசமாக | நல்லவேளையாக |
அட்சயபாத்திரம் | அருகாக்கலம் |
அனந்த சயனம் | அறிதுயில் |