அ - வரிசை 214 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அட்சயன்

கடவுள், இறைவன், பகவான், அமரன், அழிவற்றன்

அதலன்

சிவபெருமான், கடவுள், இறை

அதியன்

மேம்பட்டவன்

அதியமான்

புலவர்களின் நண்பனான அரசன், ஔவைக்கு நீண்ட நாள் வாழ அருளும் நெல்லிக்கனி அளித்தவன், தமிழ் பற்றுடையவன்

அதீதன்

ஞானியர் (மெய்யறிவாளர்)

அநிலன்

வாயுதேவன், அட்டவசுக்களில் ஒருவன்

அந்திவண்ணன்

சிவபெருமான்

அபிசாதன்

உயர்குலத்தோன், தக்கவன், அறிஞன், மதியூகி, முன்னாலோசனைக்காரன், குடிப்பிறந்தவன்

அப்பிரமேயன்

கடவுள், சிவன்

அமரன்

தெய்வீகமானவன்

அமரிறை

இந்திரன்

அமரேசன்

இந்திரன்

அமலன்

கடவுள், அருகன், சிவன், மலமிலி, சீவன் முக்தன்

அமன்

பன்னிரு கதிரவர்களுள் ஒருவன்

அமுதன்

கடவுள்

அமைவன்

முனிவன், கடவுள், அடக்கமுடையோன், அருகன், அறிவுடையவன், துறவி, ஒழுக்கமுடையவன், உடன்படுவோன்

அறிவொளி

அறிவுடையவன், அறிவைப் பரப்புபவன்

அயிலவன்

முருகன்

அயிலுழவன்

வீரன்

அரிகரன்

திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி