அ - வரிசை 213 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபகரித்தல் | பறித்தல், கவர்தல் |
அநர்த்தம் | அழிவு, கேடு |
அநாதி | தொடக்கமிலி, தொடக்கமின்மை |
அநந்தம் | முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது |
அந்தியம் | முடிவு, சாவு |
அந்தியக்கிரியை | ஈமவினை, இறுதிக்கடன் |
அந்திய காலம் | முடிவுக்காலம், இறுதிக்காலம் |
அந்நியர் | பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர் |
அபிப்ராயம் | எண்ணம் |
அகனம் | பாரமின்மை |
அகன்மணி | மணி |
அங்கணி | பார்வதி |
அரசவால் ஈப்பிடிப்பான் | asian paradise flycatcher |
அகிலன் | எல்லாவற்றையும் ஆள்பவன் |
அங்கணாளன் | கண்ணோட்டம் உடையவன், சிவபிரான் |
அங்கதி | திருமால், தீக்கடவுள் |
அசலன் | கடவுள் |
அசிதன் | சிவன், திருமால், சனிபக்தன் |
அசோகன் | அருகன், சோகமற்றவன், காமன், பீமன், தேர்ப்பாகன் |
அச்சுதன் | அழிவில்லாதவன், திருமால் |