அ - வரிசை 21 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அண்டசராசரம் | அண்டம்,பிரபஞ்சம் |
அண்டப்புளுகன் | அப்பட்டமாகப் பொய் சொல்பவன் |
அண்டப்புளுகு | அப்பட்டமான பொய் |
அண்டம் | பிரபஞ்சம் |
அண்டவெளி | பிரபஞ்சம்,விண்வெளி |
அண்டா | அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் |
அண்டு | அணுகுதல் |
அண்டை | அருகில் இருப்பது,அண்மை,பக்கம் |
அண்டை அயல் | அக்கம்பக்கம் |
அண்ணப்பிளவு | அண்ணம் பிளவுபட்டுக் காணப்படும் பிறவிக் குறை |
அண்ணம் | உள்வாயின் குழிந்த மேற்புறம் |
அண்ணல் | வணக்கத்திற்கு உரியவர் |
அண்ணளவாக | அதிகப்பட்சமாக |
அண்ணன் | (உடன் பிறந்த/உறவுமுறையிலான) சகோதரர்களில் தனக்கு மூத்தவன் |
அண்ணா | மூத்த சகோதரன் |
அண்ணா | மேனோக்க |
அண்ணாவி | (சிலம்பம் முதலியன கற்றுத்தரும்)ஆசான் |
அண்ணி | அண்ணனுடைய மனவி |
அண்மு | கிட்ட,நெருங்குதல் |
அண்மை | இன்று,இப்பொழுது என்று அறியப்படும் காலத்திற்குச் சற்று முந்தைய காலம் |