அ - வரிசை 206 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அனுசந்தானம் | ஆராய்வு, விடயோகம். |
அனுசரிக்கை | அனுசரிப்பு. |
அனுசாசகன் | ஆள்பவன். |
அனுசாதன் | தம்பி. |
அனுசாதை | தங்கை. |
அனுசை | தங்கை. |
அனுச்சிட்டம் | சுத்தம். |
அனுட்டித்தல் | கடைப்பிடித்தல் |
அனுட்டிப்பு | ஆசரிப்பு. |
அனுதமம் | சிரேட்டமானது. |
அனுத்தமம் | அதமம். |
அனுத்தரம் | ஒவ்வாமறுமொழி. |
அனுத்தியோகம் | முயற்சியின்மை. |
அனுத்தவாகம் | பிரமசரியச் சன்னியாசம். |
அனுத்தேசம் | விருப்பின்மை. |
அனுநாதம் | எதிரொலி. |
அனுபந்தசதுஷ்டயம் | அனுபந்தம். |
அனுபந்தி | தாகம், விக்கல். |
அனுபமன் | அழகன், சாமனரதிகன். |
அனுபவப்படல் | உற்றறிதல். |