அ - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடுப்பெரி

(ஏழ்மையான சூழ்நிலையில்)உணவு சமைக்க இயலுதல்

அடுமனை

ரொட்டி தயாரித்து விற்கும் இடம்

அடை

பெறுதல்
சேர்தல்
எட்டுதல்
மறைதல்
கடன் பாக்கி தீர்த்தல்
பிடித்து வைத்தல்
(ஒன்றை /ஒன்றில்)நிரப்புதல்,திணித்தல்,யன்னலை சாத்துதல்,தடுப்பு ஏற்படுத்துதல்

அடைஅடையாக

நெருக்கமாக

அடைக்கலம்

தஞ்சம்
சரண்புகல்

அடைகோழி

(குஞ்சு பொரிப்பதற்காக) முட்டைகளின் மேல் நகராமல் உட்கர்ந்திருக்கும் கோழி

அடைசல்

(அறை முதலியவற்றில்)பொருள்கள் நிறைந்து இருப்பதாக ஏற்படும் இடப் பற்றாக்குறை

அடைந்துகிட

வெளியாரின் பார்வையில் படாமல் எப்போதும் ஒரே இடத்தில் இருத்தல்

அடைப்பான்

(கண்ணாடிக் குடுவை போன்றவற்றின்)குறுகிய வாயில் செருகிவைக்கும் மூடி/(திரவத்தை நிறுத்தவும் வெளியேற்றவும் குடுவையின் கீழ்ப் பகுதியில் இருக்கும்)திருகமைப்பு

அடைப்பு

தடை,தடுப்பு

அடைப்புக்குறி

(ஒரு வாக்கியத்தில்)கூடுதல் தகவல்கலை அல்லது (கணிதத்தில்சமன்பாடு போன்றவற்றின் பகுதியாக அமைவடைக் குறிக்கப் பயன்படும் பிறை வடிவ அல்லது பகர வடிவக் குறியீடு (எ.கா.. ( ), [ ] )

அடைபடு

வெளியேற முடியாமல் இருத்தல்,தடைபடுதல்,அடங்கியிருத்தல்,(கடன்)தீர்த்தல்

அடைமரம்

பறவைகள் வசிப்பிடமாக அல்லது இரவில் தங்குமிடமாகக் கொள்ளும் மரம்

அடைமழை

கடுமையான மழை

அடைமொழி

சிறப்புக் கருதி ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு வழங்கும் சொல் அல்லது தொடர்

அடையாள அட்டை

ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம்,பெயர்,முகவரி போன்ரவற்றைக் கொண்ட சிறு அட்டை

அடையாள அணிவகுப்பு

பாதிக்கப்பட்டவர் அல்லது சாட்சி சொல்பவர் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காகச் சந்தேகத்திற்கு உரியவர்களை நீதிபதி தன் முன்னிலையில் அணிவகுத்து நிற்கவைக்கும் செயல்முறை

அடையாளம்

ஒருவரை அல்லது ஒன்ரைத் தெரிந்து கொள்ள உதவும் தோற்றம் அல்லது தன்மைக் குறிப்பு,அறிகுறி

அடையாளம் காட்டு

(பிறர் அறிந்திராத ஒன்றை) இனம்கண்டு பிரருக்குத் தெரியப்படுத்துதல்

அண்டங்காக்கை

மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம்
ஓர்காக்கை