அ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கிரமம் | கொடும் செயல்,அட்டூழியம்,[குழந்தைகளின்] சிறு தொல்லை |
அக்கிராசனர் | ஓர் அமைப்பின் தலைவர் |
அக்கினி | நெருப்பு |
அக்கினி | ஆகவனீயம் |
அரதேசி | அகதேசி |
அக்கினி குண்டம் | வேள்வியில்/சடங்கில் தரையில் தீ வளர்ப்பதற்கான சிறு தொட்டி போன்ற அமைப்பு |
அக்கினிச் சட்டி | தீச்சட்டி |
அக்கினி சாட்சியாக | [திருமணச் சடங்கில்] தீ வலர்த்து அதன் முன்பாக |
அக்கினித் திராவகம் | உடல் வெந்து போகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவிற்கு வீரியமுள்ள அமிலம் |
அக்கினி நட்சத்திரம் | கோடையில் மிகவும் வெப்பமாக இருக்கும் சுமார் மூன்று வார காலம்,கத்திரி வெய்யில் |
அக்கினிப் பரீட்சை | தன்னுடைய உண்மையான தரத்தை அல்லது தகுதியை நிரூபிக்க மேற்கொள்ளும் கடுமையான சோதனை |
அக்கினிப்பாறை | எரிமலைக் குழம்பு இறுகி உண்டான பாறை |
அக்கினிப்பிரவேசம் | [புராணத்தில்] வளர்த்த தீயில் புகுந்துதன் தூய்மையை நிரூபிக்க ஒருவர் மேற்கொள்ளும் சோதனை |
அக்கினி மூலை | தென் கிழக்கு மூலை |
அக்குவேறு ஆணிவேறாக | கூறு கூறாக,பிட்டுப்பிட்டு |
அக்குள் | தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு |
அகக்கண் | புறக்கண்களால் அறிய முடியாத உண்மையைஉணர்த்துவதாகவும் ஒருவருக்குள் இருப்பதாகவும் நம்பப்படும் கண்,மனக்கண் |
அகங்காரம் | தன்முனைப்பு |
அகச்சான்று | ஒரு நூலைப் பற்றிய கருத்தை நிறுவ அந்நூலுக்குள்ளேயே கிடைக்கும் ஆதாரம் |
அகச்சிவப்புக் கதிர் | வெப்பமான
|