அ - வரிசை 197 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அழுந்தக்கட்டல்

இறுக்கக்கட்டல்.

அழுந்துதல்

அழுந்தல்.

அழுந்துதல்

நோய், மூப்பு முதலியவற்றால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையில் கிடந்தது மிக மோசமாக அவதிப்படல்

அழைக்கை

கூவுகை.

அளகத்தி

அளகமுடையவள்.

அளகைக்கோன்

குபேரன்.

அளகைமன் சகா

சிவன்.

அளகையோர்

செட்டிகள்.

அளத்துப்பூனை

ஒருசெடி.

அளந்திடல்

அளத்தல்.

அளபெடையனுகரணம்

அளபெடைப்போலி.

அளப்புக்கு

முடக்கொத்தான்.

அளர்க்கம்

தூதுளம்.

அளவளாவுதல்

கலத்தல்.

அளவி

அளவு.

அளவின்மை

அபரிமிதம்.

அளவுதல்

கவத்தல்.

அளவுநாழி

அளக்குங்கொத்து.

அளறல்

அளறுதல்.

அளிக்கிய

கொடுக்கும்படி.