அ - வரிசை 196 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அழிதுளி

மிக்கத்துளி.

அழிபசி

மிகுந்த அல்லது கடும் பசி

அழிபுண்

ஆறாதபுண்.

அழிப்பாளி

அழிப்புக்காரன்.

அழிப்பு

அழிக்கை, தொலைப்பு.

அழியாதபத்தினி

திரௌபதி.

அழியாமை

அழிவின்மை.

அழியுநகர்

தோற்பவர்.

அழிவிலான்

கடவுள்.

அழிவிலூர்

சிதம்பரம்.

அழிவுகாலம்

யுகமுடிவு.

அழுகண்ணி

ஒருபூடு.

அழுகுசர்ப்பம்

ஒரு விஷச்செந்து.

அழுக்கணவன்

ஒருபுழு, புழுக்கூடு.

அழுக்கம்

கவலை.

அழுக்காமை

ஒருவகையாமை.

அழுக்காறாமை

பொறாமை யடையாமை.

அழுங்குதல்

அழுங்கல்.

அழுங்குப்பிடி

நெகிழாதுபிடித்தபிடி.

அழுத்தக்காரன்

அடக்கமானவன், இறுக்கமுடையவன்.