அ - வரிசை 195 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அழகியார்

அழகையுடையவர்.

அழகுகாட்டல்

சரசஞ்செய்தல்.

அழகுத்தேமல்

படர் சுணங்கினொன்று.

அழக்கு

ஆழாக்கு.

அழவல்

அழலுதல்.

அழலாடி

சிவன்.

அழலேந்தி

சிவன்.

அழற்கடவுள்

அக்கினித்தேவன்.

அழற்கதிர்

சூரியன்.

அழற்கருமம்

அக்கினிகாரியம்.

அழற்காய்

மிளகு.

அழற்பால்

எருக்கு.

அழற்றி

அழற்சி, எரிவு.

அழாக்கு

ஆழாக்கு.

அழால்

அழுதல்.

அழிச்சாட்டியக்காரன்

தொந்தரவுக்காரன்.

அஞிஞ்சு

அழிஞ்சில்வேர்.

அழிதகை

தகுதிக்கேடு.

அழிதகையவன்

தகுதிகெட்டவன்.

அழிதரவு

அழிதல்.